திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே


உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் – ஏசைய்யா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
1. பரிசுத்தமே பரவசமே
பரனே அருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
2. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைகெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர் - உம்பாதம்
3. என் முன் செல்லும் உம் சமுகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
4. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் – உம்பாதம்

கருத்துகள் இல்லை: