திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - உமக்கு மகிமை தருகிறோம்


உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில் தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே - உயர்த்தி
மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே
2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர் - உந்தன்
திருநாமம் பரிசுத்தமானதே
3. வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர் - பசித்தோரை
நன்மைகளால் திருப்தியாக்கினீர்
4. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர் – என்ன சொல்லி
பாடுவேன் என் இதய வேந்தனே

கருத்துகள் இல்லை: