திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான்


1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்
ஆ! ஆனந்தம், ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே! எந்தன் ஆருயிரே!
2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே!
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே
3. உயர் அடைக்கலத்தில என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
பரிசுத்த ஜீவியமே
4. பொன், வெள்ளியுமோ, பெரும் போ் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே

கருத்துகள் இல்லை: