எந்தக்
காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால்
உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே
உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த
வேளையிலும் துதிப்பேன்
1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என்
சொந்தமும் நீரே - எந்த
2. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என்
பாதையில் நீரே - எந்த
3. துன்ப நேரத்தில் – இன்பமும் நீரே
இன்னல் வேளையில் – என்
மாறிடா நேசர் - எந்த
4. ஞான வைத்தியராம் – ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் – என் நண்பரும்
நீரே - எந்த
5. தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே
ராஜராஜனும் – என் சர்வமும்
நீரே – எந்த
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக