திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - உம்மோடு இருப்பது தான்


ம்மோடு இருப்பது தான்
உள்ளத்தின் வாஞ்சை ஐயா
உம் சித்தம் செய்வது தான்
உள்ளத்தின் ஏக்கம் ஐயா
இயேசையா உம்மைத்தானே
என்முன்னே நிறுத்தியுள்ளேன்
1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள் - 2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் - 2
2. இரக்கமும் உருக்கமும் நீடிய
சாந்தமும் கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே
3. எபெநேசரே ஏல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
ஏல்ரோயீ காண்பவரே
4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்

கருத்துகள் இல்லை: