திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா

பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே
அன்பால் மீட்டாரே – பரிசுத்தரை
நித்தியரை பாடிப் போற்றுவேன்
ஹாலேலூயா பாடுவேன் நான் (4)
1. மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே
2. கனிவான மீட்பரவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்
3. நீதியுள்ள நீதிபரர்
மேகமீதில் வந்திடுவார்
நித்யானந்த வாழ்வினையே
எனக்காக தந்திடுவார் 

கருத்துகள் இல்லை: