திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா


நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)
1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா
2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
3. வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா
4. அடைக்கலமே கேடகமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா
5. சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
6. புது வாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புது பெலன் தந்தீரே நன்றி ராஜா

கருத்துகள் இல்லை: