நம்பிக்கையில்
நான் வளர வேண்டுமையா-திரு
நம்பிக்கையில்
நான் திகழத் தூண்டுமையா
1. இறைவனாய்
படைத்துயிர் அனைத்தையுமே
நிறைவான
ஆற்றலுடன் ஆளுபவர்
குறையாத
அன்புடைய தந்தையவர்
மறை
காட்டும் மாட்சிஇறை மன்னர் தமில்
2. தந்தையருள்
திருவாக்காம் இறை மைந்தர்
வந்துலகில்
தூயாவியால் கன்னி மகனாய்
நிந்தைமிகு
சிலுவையில் உயிர் நீத்து
விந்தை
உயிர்த்தேகி பரம் தீர்ப்பில் வருவார்
3. புது
உண்மை பலகாட்டும் ஆவியரும்
பொதுவான
ஒரே துய்ய திருச்சபையும்
புதுவாழ்வும்
புனிதரின் கூட்டுறவும்
கதி
மன்னிப்புயிர்த்தெழல் உண்டு எனும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக