அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம்
1. பண்புறு ஞானம் -
பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம்
-அன்பே
2. சாந்தமும்
தயவும் - சகல நற்குணமும்
போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள
-அன்பே
3. சினமடையாது -
தீங்கு முன்னாது
தினமழியாது - தீமை செய்யாது - அன்பே
4. சகலமுந்
தாங்கும் - சகலமும் நம்பும்
மிகைபட வென்றும்-மேன்மை
பெற்றோங்கும்-அன்பே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக