சனி, 12 அக்டோபர், 2013

Praising Songs - தந்தேன் என்னை இயேசுவே

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே.
உந்தனுக்கே ஊழியஞசெய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்.

1. ஜீவகாலம் முழுதும்
  தேவபணி செய்திடுவேன்,
  பூவில் கடும்போர் புரிகையில்
  காவும் உந்தங் கரத்தினில் வைத்து தந்தேன்

2. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
  துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
  அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
  அடியேன் உம்மில் அமரச்செய்திடும் தந்தேன்

3. ஒன்றுமில்லை நான் ஐயா!
  உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
  அன்று சீஷர்க்களித்த ஆவியால்
  இன்றே அடியேனை நிரப்பும் - தந்தேன்

கருத்துகள் இல்லை: