புதன், 25 செப்டம்பர், 2013

Tamil Praising Songs - ஆத்துமமே என் முழு உள்ளமே

ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து, - இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து

                சரணங்கள்
1. போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
  சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்

2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
  உலக முன்தோன்றி ஒழியாத - ஆத்

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
  வினை பொறுத் தருளும், மேலான - ஆத்

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
  ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்

5. உற்றுனக் கிரங்கி உரிமைப் பாராட்டும்,
  முற்றும் கிருபையினால் முடி சூட்டும் ஆத்

6. துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே,
  இதயமே உள்ளமே, என் மனமே.

கருத்துகள் இல்லை: