ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Praising Song - ஆத்துமமே, என் முழு உள்ளமே – உன்


ஆத்துமமே, என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து – இந்நாள் வரை
அன்பு வைத்தாதரித்த- உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
1. போற்றிடும் வானோர் பூதலத் துள்ளோர்
சாற்றுதற்கரிய தன்மையுள்ள
2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலகமுன் தோன்றி ஒழியாத
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும் மேலான
4. வாதை, நோய், துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர்தந்த
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்
6. துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே என் மனமே

கருத்துகள் இல்லை: