ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Praising Song - ஆசீர்வதிக்கும் இயேசு


ஆசீர்வதிக்கும் இயேசு
உன்னை ஆசிர்வதிப்பாரே
ஆண்டுகள் நன்மைகளாலே
முடிசூட்டி மகிழ்வாரே - 2
உன் வாழ்வு செழிப்பாய் மாறும்
உன் பாதைகள் நெய்யாய் பொழியும் - 2
நீ ஆசிர்வாதமாய் இருப்பாய் (2)
1. வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடிடும்
வயல்வெளி செழித்திடுமே
கர்த்தரின் மகிமை தேவனின் மகத்துவம்
தேசங்கள் அறிந்திடுமே - 2
ஒரு போதும் மறவாத
என் இயேசு நடத்திடுவார் - 2
அனுதினமும் நடத்திடுவார்
புது கிருபை அளித்திடுவார்
2. மலைகள் விலகிடும் பர்வதம் பெயர்ந்திடும்
கிருபைகள் நிலைத்திடுமே
காலங்கள் மாறிடும் கவலைகள்
மறைந்திடும் காத்திடுவார் என்றுமே
நிறைவேறும் அவர் வார்த்தை
என் இயேசு என்னுடனே
உன் நேசர் உன்னுடனே
3. கதவு திறந்திடும் கட்டுகள் அறுந்திடும்
செல்வங்கள் சுதந்தரிப்பாய்
தாவீதின் கிருபைகள் உன்னை நிரப்பிடும்
ஆளுகை செய்திடுவாய்
என்றும் தோல்வி உனக்கில்லை
இயேசு நாமத்தில் ஜெயம் பெறுவாய்
ஆசிர்வாதமாய் நீ இருப்பாய்

கருத்துகள் இல்லை: