அனாதி
தேவன் உன் அடைக்கலமே
அவர்
நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த
தேவன் என்றென்றுமுள்ள
சதா
காலமும் நமது தேவன்
மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்
1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய
தேவ அன்பே
இவ்வனாந்தரத்தில்
நயங்காட்டி உன்னை
இனிதாய்
வருந்தி அழைத்தார்
2. கானக பாதை காரிருளில்
தூய
தேவ ஒளியே
அழுகை
நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும்
நீரூற்றாய் மாற்றினாரே
3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய
தேவ அன்பே
உன்
சமாதானத்தின உடன்படிக்கைதனை
உண்மையாய்
கர்த்தர் காத்துக் கொள்வார்
4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய
தேவ தயவால்
கடும்
கானகத்தில் கர்த்தர் மார்பினில்
கிடைக்கும்
இளைப்பாறுதலே
5. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய
தேவ அருளால்
நித்திய
மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம்
தவிப்பும் ஓடிப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக