அல்லேலூயா சொல்லித் துதிப்போம் - திரியேகரை
நல்லாவியின் துணையுடனே
சரணங்கள்
1. எல்லாருமே முழுமனதுடனே
வல்லவரை வாழ்த்திப் போற்றுவோம்
சொல்லரிய நன்மை செய்தாரே
அல்லேலூயா பாடித் துதிப்போம் - அல்லேலூயா
2. விந்தை இயேசு வந்த நாள் முதல்
தந்தை தேவன் நம்மோடிருந்து
சொந்த மக்களாய் ஆக்கிக் கொண்டதால்
வந்த பயம் எல்லாம் போயிற்றே – அல்லேலூயா
3. தூயஆவி என்னில் தங்கியே
ஓயாமலே நன்மை செய்கிறார்
பேய்கள் சேட்டை ஒட்டி மீட்கின்றார்
தாயைப் போல ஊட்டிக் காக்கின்றார் - அல்லேலூயா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக