புதன், 16 அக்டோபர், 2013

Praising Songs - அசைவாடும் ஆவியே

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
    கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே

2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
    ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்

3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்
    நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே

4. அலங்காpயும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவே
    தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே

கருத்துகள் இல்லை: