Christmas Songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Christmas Songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 அக்டோபர், 2013

Christmas Songs - இப்போ நாம் பெத்லெகேம் சென்று



1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
  ஆச்சரிய காட்சியாம்
  பாலனான நம் ராஜாவும்
  பெற்றோரும் காணலாம்,
  வான் ஜோதி மின்னிட
  தீவிரித்துச் செல்வோம்,
  தூதர் தீங்கானம் கீதமே
  கேட்போம் இத்தினமாம்.

2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
  ஆச்சரிய காட்சியாம்
  பாலனான நம் ராஜாவும்
  பெற்றோரும் காணலாம்,
  தூதரில் சிறியர்
  தூய தெய்வ மைந்தன்,
  உன்னத வானலோகமே
  உண்டிங் கவருடன்.

3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
  ஆச்சரிய காட்சியாம்
  பாலனான நம் ராஜாவும்
  பெற்றோரும் காணலாம்,
  நம்மை உயா;த்துமாம்
  பிதாவின் மகிமை!
  முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
  போற்றுவோம் தெய்வன்பை.

4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
  விஸ்வாசத்தோடின்றே
  சபையில் தங்கும் பாலனின்
  சந்நிதி சோ;வோமே,
  மகிழ்ந்து போற்றுவோம்
  ஜோதியில் ஜோதியே!
  கா;த்தா! நீர் பிறந்த தினம்
  கொண்டாடத் தகுமே

Christmas Songs - ஒப்பில்லா - திரு இரா!



1. ஒப்பில்லா - திரு இரா!
  இதில் தான் மா பிதா
  ஏக மைந்தனை லோகத்துக்கு
  மீட்பராக அனுப்பினது
  அன்பின் அதிசயமாம்
  அன்பின் அதிசயமாம்.

2.ஒப்பில்லா - திரு இரா!
  யாவையும் ஆளும் மா
  தெய்வ மைந்தனார் பாவிகளை
  மீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மை
  எத்தனை தாழ்த்துகிறார்
  எத்தனை தாழ்த்துகிறார்.

3.ஒப்பில்லா - திரு இரா!
  ஜென்மித்தார் மேசியா
  தெய்வ தூதரின் சேனைகளை
  நாமும் சேர்ந்து, பராபரனை
  பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
  பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Christpas Songs - சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து



               பல்லவி
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.

             சரணங்கள்
1. நமதாதி பிதாவின் திருப் பாலர் இவர்
  அனுகூலர் இவர், மனுவேலர் இவர் - சமா
2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
  பரம ராயர் இவர், நம தாயர் இவர் - சமா
3.ஆதி நரர் செய்த தீதறவே
  அருளானந்தமாய் அடியார்; சொந்தமாய் - சமா
4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
  அறிஞோர் தேடவே ஆயரும் கூடவே - சமா
5.மெய்யாகவே மேசியாவுமே
  நம்மை நாடினாரே கிருபை கூறினாரே - சமா

Christmas Songs - ஆதித் திருவார;த்தை திவ்விய

1. ஆதித் திருவார;த்தை திவ்விய
  அற்புதப் பாலகனாகப் பிறந்தார்
  ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
  ஆதிரை யோரையீ டேற்றிட.

              அனுபல்லவி
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார்
தாம், தாம் தன்னரர் வன்னரர்
தீம், தீம் தீமையகற்றிட
சங்கிர்த, சங்கிர்த, சங்கிர்த, சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

              சரணங்கள்
2. ஆதாம் ஓதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து
  யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல்
  ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

3. பூலோகப் பாவ விமோசனர், பூரண கிருபையின் வாசனர்
  மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
  மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்

4. அல்லேலுயா சங்கீர்த்தனம், ஆனந்த கீதங்கள் பாடவே
  அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
  அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

Christmas Songs - மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

1. மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்
  சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்
  இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்
  விண்ணோர் இவ்விந்தையை கொண்டாடினார்
  கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்
  ரட்சண்ய கர்த்தாவாகத் தோன்றினார்

2. இதோ! நற்செய்தி கேளும், இன்றைக்கே
  இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
  பூலோக மீட்பராகப் பிறந்தார்,
  எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
  என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
  இராவில் தோன்றி மொழிந்திட்டானே.

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
  ஆனந்த பாட்டைப் பாடி, இசைந்து
   விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
  மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்
  என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
  தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
  அற்புத காட்சி காண விரைந்து,
  யோசேப்புடன் தாய் மரியாளையும்
  முன்னணைமீது தெய்வ சேயையும்
  கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
  ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
  உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்
  தம் ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
  அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
  அன்போடு தியானம் செய்து வருவோம்,
  நம் மீட்பர் பின்னே செல்ல நாடுவோம்.

6. அப்போது வான சேனை போல் நாமும்
  சங்கீதம் பாடலாம் எக்காலமும்
  இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
  அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்
  நம் ராயன் அன்பால் ரட்சிப்படைந்தோம்
  அவரின் நித்ய துதி பாடுவோம்

Christmas Songs - பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்



1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்
   நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை
   வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே

சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை

2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி
   மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
   தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன்

3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு
   ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்
   விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர;

4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரே
   புகழும் துதியும் உண்டாகவும்
   தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்

புதன், 2 அக்டோபர், 2013

Christian Song - Silent Night



Silent night, holy night,
All is calm, all is bright;
Round yon virgin mother and child!
Holy Infant so tender and mild,
Sleep in heavenly peace (2)
Silent night, holy night,
Darkness flies, all is light;
Shepherds hear the angels sing,
“Alleluia! hail the King!
Christ the Savior is born” (2)

Silent night, holy night,
Son of God, love’s pure light
Radiant beams from thy holy face,
With the dawn of redeeming grace,
Jesus Lord, at thy birth (2)

Silent night, holy night,
Wondrous Star, lend thy light;
With the angels let us sing
Alleluia to our King;
Christ the Savior is born (2)

Christmas Song - வானிலே நட்சத்திரம் ஞானியர் நோக்கினர்

வானிலே நட்சத்திரம் ஞானியர் நோக்கினர் நின்று
விந்தைமீன் சொல்லும் செய்தியும் யாதோ

1. வான ஞான நூற்களில் ஆய்ந்து தேடினர்
  வேந்தன் பிறந்தாரென்று விந்தை கொண்டனர்

  விண்மீன் பாதை காட்டிட ஞானியர் தொடர்ந்திட
  ஆயர்கள் தேடி வந்திட வானவர் பாடிட

    Gloria Gloria in excel sis deo (2)
    In excel sis deo -
வானிலே

2. யூத மன்னன் இங்குண்டோ என்று தேடினர்
  ஆன்ற இடங்களெல்லாம் தேடி அயர்ந்தனர்

3. இல்லம் மறுத்திடினும் இயேசு பிறந்திட்டார்
  உள்ளம் ஒதுக்கிடினும் உன்னதர் பிறந்திட்டார்

Christmas Songs - பூவின் பாவங்கள் யாவும் போக்கிட


பூவின் பாவங்கள் யாவும் போக்கிட

தேவ மைந்தன் யேசு பிறந்தார்

பெத்லகேம் ஊரில் புல்லணை மீது

பாலனாக தவழ்ந்தார்.



  பாடுவோம் பாடுவோம்

  பாலனை நாம் போற்றுவோம்

  துதிப்போம் துதிப்போம்

  ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம்



வானில் விந்தையாய் விண்மீன் தோன்றிட

வாடைக் காற்று மெல்ல வீசிட

கன்னி மாpயாள் மைந்தனாகவே

யேசு பாலன் பிறந்தார் - பாடுவோம்



வானில் தூதர்கள் கீதம் இசைக்க

ஆட்டிடையர் செய்தி கூறிட

மன்னன் ஏரோது எண்ணி கலங்க

மண்ணில் தேவன் தோன்றினார் - பாடுவோம்

Christmas Songs - இயேசு பிறந்தார் நல்பாட்டுப் பாடுங்கள்

இயேசு பிறந்தார் நல்பாட்டுப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்கள் - 2 (இயேசு)
ஆனந்த ராகங்கள் பாடிடுங்கள்
h;ப்பாpத்து பாலகனை கொண்டாடுங்கள் - 2 (ஆனந்த)

1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவே
  ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
  ஏழையாக அவதரித்தார்
  தாழ்மையாக வந்துதித்தார்
  பார்எங்கும் சந்தோஷம் பெருகிடவே - இந்த - இயேசு

2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்க
  ஏகமாய் பூமியில் பாவம் தீர்க்க
  பாலகனாய் வானவரே
  பாரினிலே அவதரித்தார்
  பார் எங்கும் சந்தோஷம் பெருகிடவே - இந்த - இயேசு

3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரே
  திறந்திட்டோம் எம் உள்ளம் அரசாளுமே
  பாவங்களை மன்னித்திடும்
  பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்
  என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே - தேவா - இயேசு

Christmas Songs - Angels We Have Heard



Angels we have heard on high
Sweetly singing o’er the plains
And the mountains in reply
Echoing their joyous strains

    Gloria in excel sis Deo!
    Gloria in excel sis Deo!

Shepherds why this jubilee?
Why your joyous strains prolong?
What the glad some tidings be?
Which inspire your heavenly song? – Gloria

Come to Bethlehem and see
Him whose birth the angels sing
Come adore on bended knee
Christ the Lord, the new born King – Gloria

Christmas Songs - பாடும் குயில்களே வந்து


பாடும் குயில்களே வந்து தாலாட்டுப் பாடுங்களே - 2

சாலேமின் மன்னவன் கண்ணுறங்க

சங்கீதம் பாடுங்களே

இன்ப சங்கீதம் பாடுங்களே



ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ… - 2



1. தேவாதி தேவன் வானம் விட்டு

  தொழுவத்தில் ஏழை கோலம் ஏற்று - (2) தேவாதி

  உனைமீட்க வந்த தியாகத்தையெல்லாம்

  கவியாக பாட வாருங்களே (2) - பாடும்



2. பலவானை தள்ளி எளியோh; உயர

  பசித்தோரின் வாழ்வில் நன்மை பெற - (2) பலவானை

  காரிருள் நீக்கும் ஒளியாக வந்த

  கர்த்தாதி கர்த்தரை போற்றிடுங்கள் (2) - பாடும்

Christmas Song - While Shepherds Kept



While shepherds kept their watching
O’er wand’ring flock by night
Be hold from out the heavens
There shone a holy light, a light

    Go tell it on the mountains
    Over the hills and everywhere
    Go tell it on the mountains
    Our Jesus Christ is born

And lo! When they had seen it
They all bowed down and prayed
Then travel’d on together
To where the Babe was laid, was laid – Go tell

The shepherds feared and trembled
When, lo! Above the earth
Ring out the angel chorus
That hailed the Savior’s birth, birth        - Go tell

Christmas Songs - புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்

  வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
  கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்

1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
   நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
   கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
   ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் - புவி

2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
   யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
   அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
   ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே - புவி

Christmas Songs - The First Noel



The first Noel the angel did say
Was to certain poor shepherds in fields as they lay
In fields where they lay keeping their sheep
On a cold winter’s night was so deep.

    Noel, Noel, Noel, Noel
    Born is the King of Israel.

And by the light of that same Star
Three wise men came from country far
To seek for a King was their intent
And to follow the Star wherever it went – Noel

This Star drew neigh to the northwest
O’er Bethlehem it took its rest
And there it did both stop and stay
Right over the place where Jesus lay      - Noel

Then entered in those wise men three
Full reverently upon their knee
And offered there in His presence
Their gold and myrrh and frank incense – Noel

Christams Songs - பொன்னொளி வீசி போகுது பாரு

பொன்னொளி வீசி போகுது பாரு
மின்மினி நட்சத்திரம் - ஆஹா பொன்னொளி
அது போகும் இடம் ஏதும் தெரியலயே
அது வந்தவிதம் ஏதும் புரியலயே, புறப்படுவோம்
மன்னவன் மாளிகை விரைந்தே சென்று
சங்கதி அறிந்திடுவோம் - ஆஹா பொன்னொளி

1. மன்னவன் ஏரோது மாளிகையில்
  ராஜகுமாரனை காணவந்தோம்
  செய்தி அறிந்த மன்னவனும்
  பயந்து நடுங்கி கலங்கக் கண்டோம் - ஆஹா

2. ஆஹா என்ன விந்தை இது
  ராஜகுமாரன் பிறந்த விதம்
  பொன்வெள்ளைப் போளம் தூபவர்க்கம்
  பாதத்தில் படைத்து பணிந்து நின்றோம் - ஆஹா