ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Praising Songs - அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்


அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப் படுகின்ற நேரமிது – சோர்ந்து
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே – சோர்ந்து
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாத பரலோகம் நாடுகிறோம் - சோர்ந்து
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே – சோர்ந்து
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் - சோர்ந்து
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் – சோர்ந்து

கருத்துகள் இல்லை: