ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Praising Song - அநாதி சிநேகத்தால்


1. அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
(உம்)காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது
2. தாயின் கருவில் தோன்று முன்னே
தெரிந்து கொண்டீரே
தாயைப் போல ஆற்றித்
தேற்றி நடத்தி வந்தீரே
3. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதேல்லாம்
கண்ணிரோடு நன்றி சொல்லி
துதிக்கின்ரோனையா
4. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடீத்தீரே.

கருத்துகள் இல்லை: