திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - தெய்வீக கூடாரமே


தெய்வீக கூடாரமே
என் தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
1. கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா
2. ஈசோப்பினால் கழுவும்
இன்றே சுத்தமாகுவோம் - உறைகின்ற
பனி போல வெண்மையாவோம்
ஐயா உம்திரு வார்த்தையினால்
3. அப்பா உம் சமுகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
4. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்
5. தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம் - எந்நாளும்
எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

கருத்துகள் இல்லை: