திருப்பாதம்
நம்பி வந்தேன்
கிருபை
நிறை இயேசுவே
தமதன்பைக்
கண்டடைந்தேன்
தேவ
சமூகத்திலே
1. இளைப்பாறுதல்
தரும் தேவா
களைத்தோரைத்
தேற்றிடுமே
சிலுவை
நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய்
அங்கு தங்கிடுவேன் - திருப்பாதம்
2. என்னை
நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல்
துன்ப நேரத்திலும்
கருத்தாய்
விசாரித்து என்றும்
கனிவோ
டென்னை நோக்கிடுமே - திருப்பாதம்
3. மனம்
மாற மாந்தன் நீரல்ல
மன
வேண்டுதல் கேட்டிடுமே
எனதுள்ளம்
ஊற்றி ஜெபித்தே
இயேசுவே
உம்மை அண்டிடுவேன் -திருப்பாதம்
4. விசுவாசத்தால்
பிழைத்தோங்க
வீர
பாதை காட்டினீரே
வளர்ந்து
கனி தரும் வாழ்வை
விரும்பி
வரம் வேண்டுகிறேன் – திருப்பாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக