திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - தந்தேன் என்னை இயேசுவே,


1. தந்தேன் என்னை இயேசுவே,
இந்த நேரமே உமக்கே.
உந்தனுக்கே ஊழியஞ்செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்! - தந்தேன்
2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன் செல்லவே
3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரண பள்ளத்தாக்கில் காத்திடுவார்
4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்

கருத்துகள் இல்லை: