திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - ஒப்புக் கொடுத்தீர் ஐயா


ஒப்புக் கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே உன்னத பலியாக
1. எங்களை வாழ வைக்க
சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா
2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன் தரும் கனியாய்
சிலுவையில் தொங்கினீர்
3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா
உமக்காய் வாழ்ந்திட
4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே
என் பாவம் சுமந்தீர் ஐயா
5. என்னையே தருகிறேன் ஜீவபலியாக
உகந்த காணிக்கையாய்
உடலைத் தருகிறேன்

கருத்துகள் இல்லை: