திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்


1. உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்.
2. தேவன் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே
3. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே
4. உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களீல் ஏந்திடுவார்.
5. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர்.

கருத்துகள் இல்லை: