திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - நன்றி பலி நன்றி பலி


நன்றி பலி நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே
அப்பா உம் திருப்பாதமே - என்
1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
 நிம்மதி பிறந்ததையா
அது நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)
2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே
இன்று உறவாடி மகிழ்ந்திடுவேன்
3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா - நான்
4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா
5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தை தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

கருத்துகள் இல்லை: