நன்றியால்
நெஞ்சம் நிறைந்திடுதே
நன்மைகள்
நாளும் நினைந்திடுதே
என்னருள்
நாதர் அருட்கொடைகள்
எத்தனை
ஆயிரம் என்றிடுதே..ஆ!ஆ!
1. ஆழ்கடல்
ஆகாயம் விண்சுடர்கள்
ஆறுகள்
காடுகள் நீர்நிலைகள்
சூழ்ந்திடும்
தென்றல் நீள்மரங்கள்
தூயநல்
தேன்மலர் தீங்கனிகள்-
2. இன்பமாய்
வாழ்ந்திட இல்லங்கள்
எழிலுடன்
குழந்தைச் செல்வங்கள்
துன்புறும்
வேளையில் துணைக்கரங்கள்
துதித்திட
சொல்லுடன் ராகங்கள்-
3. உறவினில்
மகிழ்ந்திட நல்நண்பர்
உதவிகள்
செய்திட பல்பணியர்
அறவழி
காட்டிட அருள் பணியர்
அன்புடன்
ஏற்றிட ஆண்டவர்-
4. உருவுடன்
விளங்கிட ஓருடலம்
உடலதில்
இறைவனுக்கோர் இதயம்
பெருமைகள்
கொடுமைகள் அழிந்தொழியா
திருமறை
பேசிடும் வானுலகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக