ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
1. சுகம் தந்தீரே நன்றி ஐயா, பெலன் தந்தீரே நன்றி ஐயா
2. உணவு தந்தீர் நன்றி ஐயா,உடையும் தந்தீர் நன்றி ஐயா
3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா, அரவணைத்தீர்
நன்றி ஐயா
4. கூட வைத்தீர் நன்றி ஐயா, பாட வைத்தீர் நன்றி ஐயா
5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா, அனலாக்கினீர் நன்றி
ஐயா
6.இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா,இரட்சிப்பு தந்தீர் நன்றி
ஐயா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக