திங்கள், 21 அக்டோபர், 2013

Praising Songs - பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்



பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்

1. பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
  போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் - பாவி

2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே
தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் - பாவி

3. போய்மருள் உலகுடன் பேராசையால் மயங்கிப்
  போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் - பாவி

கருத்துகள் இல்லை: