சனி, 12 அக்டோபர், 2013

Praising Songs - லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

லேசான காரியம் உமக்கது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

1. மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது
  லேசான காரியம்
  மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது
  லேசான காரியம் - லேசான காhpயம்

2. உயிரற்ற சடலத்தை உயிரி பெறச் செய்வது
  லேசான காரியம்
  தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும்
  லேசான காரியம் - லேசான காரியம்

3. இடறிய மீனவனை சீஷராய் மாற்றுவது
  லேசான காரியம்
  இடையனை கோமகனாய் அடியனை ஏற்றுவது
  லேசான காரியம் - லேசான காரியம்

  (இயேசுவுக்கு லேசான காரியம்
  என் இயேசுவுக்கு லேசான காரியம்)

கருத்துகள் இல்லை: