வெள்ளி, 11 அக்டோபர், 2013

Praising Songs - கிருபையிதே தேவ கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசாரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
  ஜவியப் பாதையிலே - இயேசு பரன்
  அனுதினமும் வழிநடந்தே
  அவரது நாமத்தில் காத்தனரே - கிருபையிதே

2. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
  வியாதியும் வேதனையும் - வைத்தியராய்
  இயேசுவல்லால் சார்ந்திடவோ
  இகமதில் வேறெமக்காருமில்லை - கிருபையிதே

3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
  ஆழமும் அறிந்துணர - அனுகிரகித்தார்
  கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
  சருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் - கிருபையிதே 

4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
  நித்திய ஜீவனை நாம் - பற்றிடவே
  விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
  அசையாது அழைப்பினை காத்துக் கொள்வோம்  - கிருபையிதே

கருத்துகள் இல்லை: