அழகாய்
நிற்கும் யார் இவர்கள்
திரளாய்
நிற்கும் யார் இவர்கள்
சேனைத்
தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய்
நிற்கும் யார் இவர்கள்
1. எல்லா
ஜாதியார் எல்லா கோத்திரம்
எல்லா
மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர்
போராட்டம் செய்து முடித்தோர்
2. வெள்ளை
அங்கியை தரித்துக் கொண்டு
வெள்ளைக்குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமை என்று
3.
தனிமையிலும் வறுமையிலும்
லாசரு
போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தை
காத்தவர்கள்
4. ஒன்றே
ஒன்று என் வாஞ்சையாம்
அழகாய்
நிற்போர் வரிசையில் நான்
ஓர்
நாளினில் நின்றிடவும்
இயேசு
தேவா அருள் புரியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக