திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - ஸ்தோத்திரம் இயேசு நாதா

1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்.
2. வான தூதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் மா பெறும்
மன்னவனே உமக்கு.
3. இத்தனை மகத்துவமுள்ள பதவி
இவ்வேளைகள் எங்களுக்கு,
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனைன ஆச்சரியம்!
4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்.
5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம்,ஸ்தோத்திரமே!

Praising Song - ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு


ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்(2)    - ஜெயம்
சரணங்கள்
1. நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் - ஜெயம்
2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் - ஜெயம்
3. நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப் படுத்துவார் - ஜெயம்
4. உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பவர் உறங்குவதில்லையே - ஜெயம்

Praising Song - ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்


ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணையவரே
என்றென்றும் ஜீவிக்கிறார் (2)
1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரை மட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொட குஷ்டரோகி சுத்தமாயினான்
2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பவரே

Praising Song - விந்தைக் கிறிஸ்தேசு ராசா!

விந்தைக் கிறிஸ்தேசு ராசா!
உந்தன் சிலுவை என் மேன்மை.
சுந்தரம் மிகும் இந்தப் பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்.
1. திரண்ட ஆஸ்தி,உயர்ந்த கல்வி,
செல்வாக்குகள் மிக விருப்பினும்,
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே. - விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்து மேன்மையாகினேன். - விந்தை
3. சென்னி,விலா,கை,கானின்று
சிந்துததோ! துயரோடன்பு:
மன்னா,இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன். -விந்தை
4. இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். – விந்தை

Praising Song - விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்


விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த
இரத்தத்தால் தந்திட்டாரே எந்தன்
ஆத்ம மீட்பின் விடுதலை
1. தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை
கெடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை - 2
என்ன சந்தோஷம் இந்த விடுதலை - 2
எந்தன் இயேசு இலவசமாய் தந்த விடுதலை - 2
2. எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்ப கானான் செல்லும்
வரை உண்டே விடுதலை
3. அடுக்காய் பேசும் பொய்யினில் விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை
பேச ஈந்தார் என்னிலே
4. மாறிட்ட எந்தன் உள்ளத்தில் விடுதலை
மாறிடா அன்பர் அடிமையாய் மாற்றிடுதே
என்ன சந்தோஷம் இந்த அடிமைக்கு
மீட்கும் அன்பை ருசித்திடவே
ஆவலில்லையோ