திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - எல்லாம் இயேசுவே எனக்கெல்லம் இயேசுவே


எல்லாம் இயேசுவே எனக்கெல்லம் இயேசுவே
தொல்லைமிகும் இவ்வுலகில் துணை யேசுவே
1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமணவாளனும்
2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்
3. கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்
4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்
5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்
6. ஆன ஜீவஅப்பமும் ஆவலுமென் காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

கருத்துகள் இல்லை: