இல்லத்தின்
தலைவராய் இயேசு - இருந்தால்
இல்லை
என்பது இல்லையே
1. நிறைவான வாழ்வினைத் தருவார் - தந்து
குறையாவும்
போக்கியே விடுவார்
மறைவான
விருந்தினராவார் – இன்ப
மறை
ஞான விருந்தினைத் தருவார்
2. வழியாக வருபவர் அவரே - வழியில்
ஒளியாக
திகழ்பவர் அவரே
வழுவாமல்
காப்பர் அவரே - நம்மைத்
தழுவியே
அணைப்பவர் அவரே
3. அவர்பாதம் தொடர்ந்திட வேண்டும் - நித்தம்
அவர்
பாதை நடந்திட வேண்டும்
அவர்
போல வாழ்ந்திட வேண்டும் - என்றும்
பிறர்க்காக
உழைத்திட வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக