திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - நீரின்றி வாழ்வோது இறைவா – உம்


நீரின்றி வாழ்வோது இறைவா – உம்
நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்த்தைகள் நான்கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும்
ஓர் ஆயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதப்பா
உம் துணையன்றி உயிர் வாழ முடியாதையா
3. எத்தனை நன்மைகள் செய்தீரய்யா – அதில்
எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேனையா
அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
ஆயிரம் நாவுகள் போதாதையா

கருத்துகள் இல்லை: