திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - தேவ கிருபை என்றுமுள்ளதே


தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றித் துதித்துப்பாடி
அல்லேலுயா என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டோம் மடிந்திடமால்
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ
2. சத்துரு சோதனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே- தேவ
3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாது காத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே- தேவ
4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் தம் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

கருத்துகள் இல்லை: