திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - ராஜா உம் பிரசன்னம் போதுமையா


ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் - 2
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
2. உலகமெல்லாம் மாயை ஐயா
உம் அன்பொன்றே போதுமையா
3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டிச் சேரணுமே
4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
5. சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே
6. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
6. பெலப்படுத்தும் போதகரே
நிலைநிறுத்தும் நாயகரே

கருத்துகள் இல்லை: