எனக்கு
உம் கிருபை போதுமே - நேசரே
எனக்கு
உம் கிருபை போதுமே
கவலைகள்
நிறைந்த துன்ப உலகிலே
எனக்கு
உம் கிருபை போதுமே
1. துணையில்லா
ஒரு மாடப்புறா போல்
தவிக்கும்
என்னை சேர்த்திட வாரும்
நாதனின்
வருகை தாமதமானால்
விழாமல்
காத்திடுமே – என்னை - 2
2. சிங்கத்தின்
குகையில் தள்ளினாலும்
அக்கினியில்
என்னை இழுத்தெறிந்தாலும்
உள்ளம்
கலங்கும் நேரங்கள் எல்லாம்
விழாமல்
காத்திடுமே – என்னை - 2
3. சிகிச்சைக்கு
ஒரு வைத்தியனும் இல்லை
ஆறுதல்
அடைய இடமும் இல்லை
உமது
வழியும் கிருபை வசனமும்
மண்ணில்
என் ஆறுதலே – இந்த – 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக